Sinhala (Sri Lanka)English (United Kingdom)
 நீங்கள் இஙகே : முதற் பக்கம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம

        எம்மைப் பற்றி...

அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது, 1904ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதுடன் அதுவே மத்திய அரசாங்க ஆய்வுகூடமாகவும் உள்ளது. இத்திணைக்களமானது சட்ட விஞ்ஞான உணவு விஞ்ஞானம் ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. உணவு விஞ்ஞான பகுதியானது பொதுமக்களின் சுகாதாரத்தை நோக்கிய சேவைகளை வழங்குகின்றது. மறுபுறம், சட்ட விஞ்ஞான பகுதியானது பிரதானமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு குற்றப்புலனாய்வு தொடர்பான சேவைகளை வழங்குகின்றது. இந்த இரு பகுதிகளிலுமே பொலிஸ், சட்டநீதிமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அனுப்பப்பட்ட மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கும் பகுத்தாய்வதற்குமென விசேடமாக பயிற்சிபெற்ற விஞ்ஞானிகள் காணப்படுகின்றனர்.  alt

        நாம் செய்வது...

இத்திணைக்களத்தின் உணவுப் பகுதியானது உணவும் மதுபானமும், பால், நீர் என மூன்று ஆய்வுகூடங்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு பிரிவும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம், உணவுச் சட்டம், தேசிய சூழல் சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, மாதிரிகளைப் பகுத்தாய்ந்து, விஞ்ஞான அறிக்கைகளைப் பிரசுரிப்பதுடன், மதுபான பகுப்பாய்வானது மது வரி கட்டளைச்சட்டத்தின்கீழ் இடம்பெறும். சட்ட விஞ்ஞான பகுதியானது, எறிபடைத்துறை, வெடிமருந்துகள், சந்தேகத்திற்கிடமான ஆவணம், நீர்ப்பாயவியல், நஞ்சியல், பல்லின பிரிவு முதலிய ஆறு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. சட்ட மருத்துவ பகுதியின் ஒவ்வொரு பிரிவும் கொலை, கற்பழிப்பு, களவு, இடித்துவிட்டு தப்பியோடுதல், தீயினால் நாசம் செய்யும் குற்றம், மோசடி போன்ற பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பான சான்றுகளின் பரிசோதனையை மேற்கொள்கின்றது.

       எம்முடன் சேர்ந்து கடமையாற்றுபவர்கள்...

நாம் பின்வரும் நிறுவனங்களுடன் சேர்ந்து
கடமையாற்றுகின்றௌம்.சட்டஇதொழில்இ நீதிமன்றங்கள் பொலிஸ் திணைக்களம்இ குற்ற புலனாய்வூத் திணைக்களம்இ சுகாதாரத் திணைக்களம்இ சங்கத்திணைக்களம்இ மதுவரித் திணைக்களம்இ இலங்கை தரப்படுத்தல் நிறுவனம்இநுகர்வோh;இ அதிகாரசபைஇ இலங்கை தேயிலை சபைஇ மத்திய சுற்றாடல் அதிகார சபைஇ இலங்கை காப்புறுதி நிறுவனம் தேசிய லொத்தர் சபைஇ கொழும்பு சட்டத்தை நிலைப்படுத்தும் நிறுவனங்கள். 
 

புதிது என்ன

A new division was established

In 1935, a new division was established to examine forensic questioned documents, which was named as Government Questioned Document Division.

It is significant to note that the government analyst establishment was formed into a separate Government Department on July 1913. In 1940, the first Ceylonese Government Analyst Mr. W.R. Chanmugam was appointed.

மேலும் பார்க்க


பதிப்புரிமை © 2010 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது. முழுப் பதிப்புரிமை உடையது
ICTA உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது